கற்பகப் பிள்ளையார் கோயில்


தொழுவார் துயர்தீர்தது அடியார்களுக்கு அருள்புரிகின்றார் கற்பகப்பிள்ளையார். கற்பகப்பிள்ளையார் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் ஓடையம்பதி உயர் தனிச் சிறப்புக்கு உரியது. ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்பார்கள். ஆலய முகப்பில் பஞ்ச தளங்களைக் கொண்ட இராஜகோபுரம் கம்பீரமாக அமைந்திருப்பது அழகுக்கு அழகு தருவதாகும். இவ்வாலயம் ஊர்நடுவில் அமைந்திருப்பதும் ஒருசிறப்பு. இவ்வாலய மஹோற்சவம் ஆனிப்பூரணையைத் தீர்த்தத் தினமாகக் கொண்டு நடைபெறுகின்றது. ஒரு காலத்தில் பத்துத் திருவழாக்களே நடந்தன. இப்பொழுது பதினைந்து திருவிழாக்கள் இடம்பெறுகின்றன. அழகிய சித்திரத்தேரும் உண்டு.
தெற்கு மேற்கு வீதிகளில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயமும், கிழக்கில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபமும்;, வடபால் கமநிலமும் சூழ இருப்பதும் பலவகைக் காட்சிகளாக அமைந்துள்ளன. கற்பகவிநாயகர் திருவந்தாதி என்ற நூலினைக் கவிஞர் செ. ஐயாத்துரை அவர்களும் கற்பகவிநாயகர் அந்தாதி என்ற நூலினைக் கோயிலாக் கண்டியைச் சேர்ந்த ஆசிரியரான சு. பொ. குழந்தை வடிவேலு அவர்களும், இயற்றி வெளியீடும் செய்துள்ளனர்.
கற்பகவிநாயகர் பொற்பாதம் பணிவோர் நற்கதிபெறுவர்.


நன்றி
ஆசிரியமணி திரு அ பஞ்சாட்சரம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS